புதன், 22 ஜூன், 2011


சீனாவை முந்தியது ஜப்பானின் அதிவேக சுப்பர் கணனி 'கே': வேகம் 8.162 பீடாபுலொப்ஸ் _ 




  உலகின் அதி வேக சுப்பர் கணனியை (Super Computer) கொண்ட நாடாக சீனாவே இருந்து வந்தது.

சீனாவின் டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படுவதே உலகின் அதிவேக சுப்பர் கணனி. இது தொடர்பான செய்தியை நாம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியிருந்தோம்.

இந்நிலையில் சீனாவின் சாதனையை ஜப்பான் முறியடித்துள்ளது.

அக்கணினிக்கு சுப்பர் கணனி கே ('K') எனவும் பெயரிட்டுள்ளனர்.

இதனை ஜப்பானின் கணனி தயாரிப்பு நிறுவனமான 'புஜிஸ்டு' ஆகும்.

இக்கணனியானது தற்போது ரயிகன் எட்வான்ஸ் இன்ஸ்டிடியுட் போர் கொம்பியூடேஷனல் சயன்ஸ் (RIKEN Advanced Institute for Computational Science) இலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வேகம் 8.162 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 8.162 குவாட்ரில்லியன் (quadrillion) கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாகும்

இத்தகவல்களின் படி சுப்பர் கணனி 'கே' ஆனது டியானி (Tianhe) - 1 A ஐ விட மூன்று மடங்கு வேகம் கூடியது.

டியானி (Tianhe) - 1 A இன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). என்பதுடன் இது செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புக்களையே மேற்கொள்ளக்கூடியதாகும்.

இக்கணினி, 68, 544 சிபியுக்களை ( CPU ) கொண்டதுடன் அவை ஒவ்வொன்றும் 2.2 Ghz வேகத்தில் இயங்கும் 8 கோர்களைக் கொண்டது.

இதன் படி சுப்பர் கணனி 'கே' ஆனது 1 மில்லியன் இணைந்த டெஸ்க் டொப் கணனிகளுக்கு சமமானதாகும்.

இதனை இயக்குவதற்கு தேவையான மின்சக்தியின் மூலம் சுமார் 10,000 வீடுகளுக்கு மின் விநியோகம் வழங்க முடிவதுடன் இயக்குவதற்கான வருடாந்த மொத்தச் செலவு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். BY:KAPILAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக