திங்கள், 25 ஏப்ரல், 2011

விக்ரம் படத்தை தடை செய்யக்கோரி,கருணாநிதியிடம் சிவசேனா கட்சி மனு
விக்ரம் படத்தை தடை செய்யக்கோரி,கருணாநிதியிடம் சிவசேனா கட்சி மனு விக்ரம் நடித்து வெளியாகவுள்ள தெய்வத்திருமகன் திரைப்படத்தினை தடைசெய்யுமாறு வலியுறுத்தி தமிழ் மாநில சிவசேனா கட்சித் தலைவர் எம்.திரவியபாண்டியன் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து மனு ஒன்றைக் கையளித்துள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- தெய்வீகத்திருமகன் என்றும் தெய்வத்திருமகன் என்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையே மக்கள் அழைத்து வருகிறார்கள். ஒரு மனநலம் குன்றிய கதாபாத்திரமாக படத்தின் கதாநாயகர் சித்தரிக்கப்பட்டு அதற்கு தெய்வத் திருமகன் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

அரசியலிலும் ஆன்மீகத்திலும் கொடி கட்டிப் பறந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் புகழை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு விக்ரம் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் தெய்வத் திருமகன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்.

என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக