கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும்
2012 ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பிரபலமான கையடக்கத்
தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர்
ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் பிரகாரம் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள்
அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்கு
மெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வருடத்தில் 'ஸ்மாட்போன்' விற்பனை எண்ணிக்கையானது
468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த வருடத்துடன்
ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய
இயக்குதளமாக மாறுமெனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நொக்கியாவுடன் இணைந்துள்ளதால் மைக்ரோசொப்டின்
விண்டோசானது 3 ஆவது மிகப்பெரிய இயங்குதளமாக இருக்குமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. _kapilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக