புலராத பொழுது..!!!
மலர்ந்திட்ட முகத்திலாள்
மையிட்ட கண்ணிலாள்
மாங்கனி நிறத்திலாள்
மாதுளம் இதழினாள்
மென்னடை பேச்சினாள்
மெல்லிய இடையினாள்
நான் கொண்ட காதலியை
கவி சொல்ல வார்த்தையில்லை
பொங்கலின் மறுநாளில்
புலராத பொழுதினிலே
எங்கிருந்தோ வந்த செல்
இவள் வீட்டில் விழுந்ததையா
அந்நொடியே அவளுயிரை
காவு கொண்டு சென்றதுவே
துடிதுடித்த என் நெஞ்சம்
அவள் நினைவை சுமந்துகொண்டு
துயர்தோய்ந்த மனதோடும்
அன்றுதொட்டு என் வாழ்வில்
புலராத பொழுதாகி
தனிமையெனும் நிலைகொண்டு
வாழுகின்றேன் இவ்வுலகில்...By.kapilan
மையிட்ட கண்ணிலாள்
மாங்கனி நிறத்திலாள்
மாதுளம் இதழினாள்
மென்னடை பேச்சினாள்
மெல்லிய இடையினாள்
நான் கொண்ட காதலியை
கவி சொல்ல வார்த்தையில்லை
பொங்கலின் மறுநாளில்
புலராத பொழுதினிலே
எங்கிருந்தோ வந்த செல்
இவள் வீட்டில் விழுந்ததையா
அந்நொடியே அவளுயிரை
காவு கொண்டு சென்றதுவே
துடிதுடித்த என் நெஞ்சம்
அவள் நினைவை சுமந்துகொண்டு
துயர்தோய்ந்த மனதோடும்
அன்றுதொட்டு என் வாழ்வில்
புலராத பொழுதாகி
தனிமையெனும் நிலைகொண்டு
வாழுகின்றேன் இவ்வுலகில்...By.kapilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக