சனி, 6 ஆகஸ்ட், 2011

பேஸ்புக்கிலிருந்து விலகிய மார்க் ஸூக்கர் பேர்க்கின் சகோதரி: கூகுள் + உடன் இணைவாரா?
 பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸூக்கர்பேர்க்கின் சகோதரியும், அச் சமூகவலையமைப்பின் சந்தைப்படுத்தல் இயக்குநருமான ரெண்டி ஸூக்கர்பேர்க் தான் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரெண்டி ஸூக்கர்பேர்க் தான் வேறு ஓர் ஊடக நிறுவனத்தினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதனாலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது இராஜினாமாக் கடிதத்தினையும் பேஸ்புக் நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். 

இது தொடர்பில் மார்க் ஸூக்கர்பேர்க் எவ்வித அறிவிப்பையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

எனினும் அவரது இராஜினாமாவை உறுதிசெய்துள்ள பேஸ்புக் அவரது சேவைக்கு நன்றியுடன் விடையளிப்பதாக தெரிவித்துள்ளது.

ரெண்டி ஸூக்கர்பேர்க் பேஸ்புக்கில் சுமார் 6 வருடங்கள் பணி புரிந்தவராவார்.

இவர் தான் குறிப்பிட்டுள்ளதைப் போல தனது சொந்த நிறுவனத்தினை ஆரம்பிப்பாரா அல்லது கூகுள் + சமூகவலையமைப்பில் இணைவாரா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

1 கருத்து: