ஞாயிறு, 27 மார்ச், 2011


மின் தாக்கத்தால் சிதைந்த முகம் சீரான விந்தை! 
 









மின்சாரம் தாக்கியதால் முகத்தின் உறுப்புக்கள்
 அனைத்தினையும் பறிகொடுத்த அமெரிக்காவின்
 டெக்ஸஸ் மாகாணத்தைச் சேர்ந்த நபரொருவருக்கான
 முழு முகமாற்று சத்திரசிகிச்சை கடந்தவாரம்
வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
பிரிகம் பெண்கள் வைத்தியசாலையில் நடைபெற்ற
 இது, உலகின் 2 ஆவது முழு முகமாற்று
 சத்திரசிகிச்சையாகும்.
டலஸ் வெய்ன்ஸ் என்ற 25 வயதான கட்டிடத்
தொழிலாளிக்கே இச்சத்திரசிகிச்சை
 மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின்விபத்தில்
 இவரது முகம் முற்றிலுமாக உருத்தெரியாமல்
சிதைந்து போனது.
எனினும் மனந்தளராத வெய்ன் கடந்த வாரம்
 சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்துள்ளார்.
இவரது முகத்தின் தோல், மூக்கு, உதடுகள்,
மற்றும் நரம்புகள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 15 மணித்தியாலங்கள் நடைபெற்றதாகக்
கூறப்படும் இச்சத்திரசிகிச்சையில் 30 வைத்தியர்கள்
 ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகின் முதலாவது பகுதியளவிலான முகமாற்று
சத்திர சிகிச்சை 2005 ஆண்டு பிரான்சில்
மேற்கொள்ளப்பட்டதுடன் முதலாவது
முழு அளவிலான முகமாற்று சத்திர சிகிச்சை
ஸ்பானிய வைத்தியர்களால் விவசாயி ஒருவருக்கு
கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக