வியாழன், 8 செப்டம்பர், 2011



இன்றைய கார்ட்டூன்
Cartoon
அண்டார்டிக்காவில் பெருகிவரும் இராட்சத நண்டு இனம்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை 

  புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும்.

நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை.

எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம்.

இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம், அண்டார்டிகாவின் 'பார்மர் டீப்' எனப்படும் பகுதியில் 'கிங் கிரப்' எனப்படும் இராட்சத நண்டினம் பெருகி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள் வரை வளரக்கூடியன.

இவ்வகை நண்டுகள் வெப்பமான நீர்ப் பகுதிகளிலேயே குறிப்பாக 1.4 பாகை செல்சியஸிற்கும் குறைவான வெப்பநிலைப் பகுதியிலேயே வாழும் .எனினும் அவை தற்போது அண்டார்டிக் பகுதியில் வாழ்ந்துவருகின்றமையானது அப்பகுதியில் வெப்பநிலை அதிகரித்துவருவதனைக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவை சுமார் 30 - 40 வரையான ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடல் வாழ் தாவரங்கள், ஜெலி மற்றும் நட்சத்திர மீன்கள் உட்பட கடல் வளங்களை உண்பதுடன் அவற்றை வேகமாக அழித்துவருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவற்றின் பரம்பல் மேலும் அதிகரிப்பது அப்பகுதியில் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.By:Kapilan

புதன், 7 செப்டம்பர், 2011


ஐ டியூன்ஸுக்குப் போட்டியாக பேஸ்புக் _ 
  அப்பிளின் ஐ டியூன்ஸுக்குப் போட்டியாக பேஸ்புக்கும் ஒன்லைன் இசைச் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை பேஸ்புக் இம்மாதம் 22 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள பேஸ்புக்கின் டெவலப்பர்களுக்கான மாநாட்டில் ( Facebook’s developer conference) அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கென பிரத்தியேகமாக மென்பொருட்கள் எதனையும் உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யத்தேவையில்லை. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்கின் ஊடாக இச் சேவையினுள் நுழையமுடியும்.

இச்சேவையின் ஊடாகப் பாடல்களைக் கட்டணம் செலுத்தியும் சிலவற்றை இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

உலகில் உள்ள பல பிரபல இசைச் சேவைகள் பேஸ்புக்குடன் ஏற்கனவே இணைந்துள்ளன. இதேவேளை சுவீடனின் பிரபல இசைச்சேவையான 'ஸ்பொடிபை' பேஸ்புக்குடன் இச்சேவையை வழங்க கைகோர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 'ஸ்பொடிபை' சேவையானது சுமார் 15 மில்லியன் பாடல்களைக் கொண்டுள்ளதுடன் சுமார் 10 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டது.

எனவே பேஸ்புக்கின் இச்சேவையானது அப்பிளின் ஐ டியூனுக்கு தகுந்த போட்டியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. By:Kapilan

செவ்வாய், 6 செப்டம்பர், 2011


இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? _

  இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.

இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.

அத்தளம் www.soovle.com

இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.

இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.

மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.By:Kapilan.

வியாழன், 1 செப்டம்பர், 2011

பூனையின் சிறுநீரின் மணத்தால் பாலியல் ரீதியில் கவரப்படும் எலிகள்
எலிகள் எவ்வாறு பூனைகளிடம் வசமாக சிக்கிக் கொள்கின்றன என்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூனையின் சிறுநீரின் மணமானது எலிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் காரணியாக இதுவரை கருதப்பட்டது.

ஆனால் ஆண் எலிகள் பூனையின் சிறுநீரின் ரொக்ஸோ பிளாமா இரசாயனத்தை நுகரும் போது அவற்றின் மூளையில் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுவது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் எலிகளின் மூளையில் அச்சத்தை தோற்றுவிக்கும் பகுதிகளும் செயலிழந்து விடுவதுடன் பயமும் பாலியல் உணர்ச்சியாக மாற்றப்படுகின்றது.

இதனால் எலிகள் பயமிழந்து பூனைகளை நெருங்கி வந்து அவற்றுக்கு இரையாகின்றன.__

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

உலகின் முதலாவது 17 அங்குல இரட்டை திரைகளுடன் கூடிய மடிக்கணனி 
உலகின் முதலாவது 17 அங்குல எல்.ஈ.டி எச்.டி இரட்டைத் திரைகளுடன் கூடிய மடிக்கணனியை அலஸ்காவைச் சேர்ந்த ஜி ஸ்கிரீன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

'ஸ்பேஸ்புக்' என இம்மடிக்கணனி பெயரிடப்பட்டுள்ளது. இக் கணனியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கவுள்ளது. 
வருட இறுதியில் இது சந்தைக்கு வரவுள்ளது. இதை உருவாகியவர் ஜி ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரதான் நிறைவேற்று இயக்குனரும் வடிவமைப்பாளருமான அலன் ஸ்டுவெர்ட் ஆவார்.

மற்றைய மடி கணனிகளை விட, இதில் 50 % மேலதிக பணிகளை ஆற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை 1899 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்படுகிறது.

ஏசர் நிறுவனமும் இரட்டைத் திரைகளைக் கொண்ட மடிக் கணனிகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. By:Kapilan

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

நவம்பர் 5, பேஸ்புக்கின் இறுதித் தினமா?:
ஹெக்கிங் குழு அறிவிப்பு .
   பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம்
முதல் நிறுத்தப்படுமென
 ஜனவரி மாதமளவில் செய்தி
 வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும்
ஏற்படுத்தியிருந்தது.

தற்போது பேஸ்புக் சேவையை 'Anonymous' என்ற
பிரபலமான ஹெக்கர்களின் குழு தாக்கவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன்
 பேஸ்புக் சேவை நிறைவிற்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான அறிவிப்பு அடங்கிய காணொளியானது
 கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி வெளியாகியிருந்தது.

எனினும் தற்போதே அது தொடர்பில் தகவல்கள் வெளியுலகிற்கு
கசிய ஆரம்பித்துள்ளன.

' ஒபரேஷன் பேஸ்புக்' என இத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக
அக் குழு அறிவித்துள்ளது.

இது வெறும் புரளியெனக் கூறியுள்ள இணைய பாதுகாப்பு
நிறுவனங்கள் இத்தகவலை மறுத்துள்ளன.

இருந்த போதிலும் குறித்த குழுவே கடந்த சில காலங்களாக
 பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட்,
 பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்
கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது.

பேஸ்புக் தொடர்பில் கடுமையாக சாடியுள்ள அவ்வமைப்பு
 ஷூக்கர் பேர்க் எமது விபரங்கள் மற்றும் தகவல்களின்
இரகசியத் தன்மையை பாதுகாப்பதில்லை எனக்
 குறிப்பிட்டுள்ளது.

நமது தகவல்களை பேஸ்புக் அரசாங்கம் மற்றும் உளவு
 நிறுவங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அக்குழு
 குற்றஞ்சாட்டியுள்ளது.

பொதுவாக 'Anonymous' குழு ஓர் இணையக் கட்டமைப்பினைத்
 தாக்குவதற்கு சில தினங்களுக்கு முன்னரே இது தொடர்பிலான
அறிவிப்பினை மேற்கொள்ளும்.

இந்நிலையில் தற்போது பல நாட்களுக்கு முன்னரே அக்குழு
 அறிவிப்பை மேற்கொண்டுள்ளது

எவ்வாறாயினும் இச் செய்தியானது பேஸ்புக்
பாவனையாளர்களிடையே ஒருவித கலக்கத்தை
ஏற்படுத்துவது உறுதி. _KAPILAN.
_